எகிறி அடிக்கும் பிரஷர்.. நடுவில் வசமாக சிக்கி முழிக்கும் எடப்பாடி.. அதிமுகவிற்கு இப்படி ஒரு நிலையா?
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த சூட்டோடு சூடாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

இந்த கோவில் திறப்பு விழா காரணமாக வட மாநிலங்களில் மக்கள் இடையே தீவிர பாஜக ஆதரவு அலை உள்ளது.முக்கியமாக உத்தர பிரதேசம் தொடங்கி பீகார் வரை சில ஹிந்தி மாநிலங்களில் தீவிர பாஜக உணர்வு எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு.. லோக்சபா தேர்தல் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே ஏப்ரல் 16ம் தேதி லோக் சபா தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி இரண்டாம் வாரம் அல்லது 3ம் வாரம் சூட்டோடு சூடாக இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகும். 2024 லோக்சபா தேர்தல் பெரும்பாலும் ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட ஆன்மீக விஷயங்களை மையப்படுத்தியே இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
மீண்டும் உருவாகலாம்: இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள், தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். இதற்காக முக்கியமான டெல்லி தலை மூலம் சமாதானம் பேச உள்ளனர்.
அழைப்பு: அதன்படி தேர்தலுக்கு ஜனவரியில் இருந்து 4 மாதமே இருக்கும் நிலையில்.. பிப்ரவரியில் கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, இதற்காக டெல்லியை சேர்ந்த பாஜக தலை ஒருவர் எடப்பாடி உடன் பேசுவார் என்று கூறப்படுகிறது,
அதோடு இல்லாமல் அதிமுகவிற்கு 4 எம்பிக்கள் இருந்தால் போது 4 அமைச்சரவை பதவிகளை வழங்குவோம். எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று பெரிய ஆபர் ஒன்றையும் கொடுத்து உள்ளனராம்.
பிரஷர்: இது இப்படி இருக்க லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி முக்கிய கண்டிஷன் போட்டுள்ளாராம். திமுக இந்த தேர்தலில் வலுவாக உள்ளது. அவர்களை எதிர்க்க ஒரே வழி அதிக காசு இறக்க வேண்டும். 20 கோடிக்கு மேல் பணம் இறக்க முடிந்தவர்கள் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.
இதன் அடிப்படையில் அவர் வேட்பாளர் லிஸ்டை தயார் செய்ய ரெடியாகிவிட்டாராம். ஆனால் மாவட்ட செயலாளர்களோ மாஜி அமைச்சர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டு தொகுதி வீதம் ஒவ்வொரு மாஜி அமைச்சரும் செலவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனராம்.
ஆனால் மாஜிக்களோ.. இப்போது எம்பி தேர்தலில் வென்று என்ன செய்ய போகிறோம். பெரிதாக பலன் இல்லாத தேர்தலுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று விட்டேத்தியாக இருக்கிறார்களாம். இரண்டு தரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரஷர் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
எம்பிக்கள்: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலான் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications