பேய் மழை கொட்டப் போகுது.. ‘இந்த’ மாவட்டங்களில் இன்னைக்கு சம்பவம் உறுதி! ரெடியா இருங்க மக்களே!
சென்னை: தமிழகத்தில் இன்று கோவை மாவட்டம் மலைப் பகுதியில் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மிகுந்த உச்சத்தில் இருக்கும். அப்போதெல்லாம் வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெயில் உச்சம் தொட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, சென்னை ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜூன் மாதத்திற்கு பிறகு அதாவது தமிழில் ஆடி மாதத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதற்கு பிறகு மழையின் தாக்கம் தொடங்கும். தற்போது அவ்வப்போது பலத்த காற்று வீசி வந்தாலும் தென் மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்டம் மலைப் பகுதியில் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications