அடிச்சுத் தூக்கப் போகுது மழை..வஞ்சனை காட்ட மாட்டார் வருண பகவான்! ’இந்த’ ஏரியா மக்களுக்கு ஹேப்பி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று ( மே 13ஆம் தேதி) தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெயிலும், ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால் மக்கள் அசௌகரியத்தை உணர்கின்றனர்.

இந்த நிலையில் கோடை வெயில் அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

Weather Rain imd

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக மே 13ஆம் தேதியான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மே 14ஆம் தேதியான நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 14 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+