கவனம் மக்களே.. இந்த 8 மாவட்டங்களில் இன்று கொட்ட போகுது மழை.. அடுத்த 5 நாட்களுக்கும் ஜில் அறிவிப்பு
அடுத்த 5 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது
சென்னை: வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது... சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது..
இந்த மழைபொழிவானது, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று கன மழை பெய்யலாம்.

டெல்டா
டெல்டா மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது... அதேபோல மற்ற மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கலாம்.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும்... நகரின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது

மீனவர்கள்
இது, நாளை மறுநாள் ஆந்திரா - ஒடிசா கரையை நோக்கி நகர கூடும்.. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்.. தனால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த 10ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் திசை வேகம் காரணமாக 13ம் தேதி அது உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு கடல் பகுதியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரைப்பாலம்
இதனால் 5 நாட்களுக்கு இந்த மழை பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் மழையால், பல இடங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் குற்றியாறு தரைமட்ட பாலம் நீரில் மூழ்கியது.. இதனால் சுமார் 6 மணி நேரமாக ஆற்றை கடக்க முடியாமல் மலைவாழ் மக்கள் பேருந்தில் காந்திருக்கு சூழலும் உருவானது.

மக்கள் அவசதி
அதேபோல, அரியலூர் மாவட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது... ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முழுவதும் காற்று, இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொடியது.. சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். அதேபோல, சேலம் மாவட்டத்திலும் மழை கொட்டி தீர்க்கிறது.. இதனால் சுற்றுலா மையமான ஏற்காடு மலைப் பாதையில் மண் சரிவும், அதனால் வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. திருச்சி, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் மழை பெய்ததால், பல இடங்களில் மழைவெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications