மழை பாதிப்பு: மயிலாடுதுறையின் 2 தாலுகாவில் குடும்ப அட்டைக்கு ரூ1,000 நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உரிய கணக்கெடுப்புக்கு பின் பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதவ்லர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. மழை வெள்ல பாதிப்பை அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.
சீர்காழியில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்தெடுத்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத பெருமழை பெய்ததால் சீர்காழியே சிதைந்து போனது. ஒரே நாளில் 40 செ.மீ. மழையை எதிர்கொண்டது சீர்காழி.
இதனைத் தொடர்ந்து சீர்காழி வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்ற்ய் ஆய்வு நடத்தினார். முன்னதாக அமைச்சர்கள் குழு அங்கேயே முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வந்தது. மயிலாடுதுறை மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். புதுச்சேரியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ1,000 வழங்கப்படும் என்றும் பயிர் சேதம் தொடர்பாக கணக்குகள் எடுத்த பின்னர் நிவாரண உதவி அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்டடத்தின் தரங்கம்பாடி, சீர்காழி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications