சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் ரிப்போர்ட்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. டவ்தே புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
முக்கியமாக குமரி, கொங்கு மாவட்டங்களில் கடந்த வாரம் நல்ல கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் யாஸ் புயல் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை
அதோடு இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். வெப்பசலனம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி
அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரியில் ஏற்கனவே அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குமரி கேரளாவை ஒட்டி உள்ள கிராமங்களில் எல்லாம் கனமழை பெய்து வருகிறது.

குமரி
யாஸ் புயலை முன்னிட்டு உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுவை, சிதம்பரம், சீர்காழியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

டெல்டா
டெல்டா மாவட்டங்களில் இன்று வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம். திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் யாஸ் புயலை முன்னிட்டு உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications