ஆஹா.. திரும்பவும் ஆரம்பிச்சிருச்சு.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. மக்கள் அவதி
Recommended Video
சென்னை: சிறிய மழைக்கே சின்னாபின்னமாகிவிடும் சென்னையை கடந்த மூன்று நாட்களாக ஈரம் காயாமல் வைத்திருக்கிறது பெருமழை. விட்டுவிட்டு பெய்த வரும் இந்த மழை தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது.
மற்ற ஊர்களுக்கு எல்லாம் மழை இல்லாமல் போனால் தான் கண்டம். ஆனால் சென்னைக்கு அதிக மழை பெய்தாலும் கண்டம். பெய்யாமல் போனாலும் கண்டம் தான்.

மற்ற ஊர்களை காட்டிலும் பளிச்சென சென்னை சாலைகள் காணப்பட்டாலும் சிறிய மழைக்கே குளமாக மாறிவிடும். இந்த சூழ்நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை மழை பெய்த நிலையில் தற்போது மாலையிலும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல். சூளைமேடு, நுங்கம்பாக்கம்உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications