இருக்கு.. இன்றும் நாளையும் மழை இருக்கு.. மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி வீசுமாம்.. ஹேப்பி நியூஸ்
தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.. சில மாவட்டங்களில் வெயிலின் கடுமை குறைவாக தென்படுகிறது.

தற்போது மீண்டும் தென் தமிழகத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதில், வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாளைக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மற்றொரு அறிவிப்பில், "ஜூலை 25, அதாவது இன்றைய தினம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 26 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 27 மற்றும் ஜூலை 28 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 29 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.
அதனால் இந்த 3 நாட்களும் சூறாவளி வீசபோவதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications