சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடி மின்னலுடன் 4 மாவட்டங்களுக்கு கனமழை...சூறாவளியும் வீசும் - வானிலை அறிவிப்பு

சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய தினம் சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. கிளநிலை, புதுக்கோட்டை 4 செமீ, நாமக்கல் 3 செமீ, மதுரை வீரகனூர் அணைக்கட்டு 3 செமீ , அறந்தாங்கி, சின்னக்கல்லார் கோயம்புத்தூர், காரைக்கால், வால்பாறை, சின்கோனா, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் முனைவர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று, சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு... மண்ணின் மக்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருக -வேல்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு... மண்ணின் மக்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருக -வேல்முருகன்

இடி மின்னலுடன் மழை

இடி மின்னலுடன் மழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் கனமழை

தென் மாவட்டங்களில் கனமழை

20 மற்றம் 21ஆகிய தேதிகளில், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், நீலகிரி

கோயம்புத்தூர், நீலகிரி

22ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23ஆம் தேதி மழை

23ஆம் தேதி மழை

23 ஆம் தேதி, வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Recommended Video

    விடாது வெளுத்து வாங்கும் கனமழை… உத்தரகாண்ட்டில் ரெட்அலெர்ட்… பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்
    48 மணி நேரத்திற்கு மழை

    48 மணி நேரத்திற்கு மழை

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    சூறாவளி வீசும்

    சூறாவளி வீசும்

    வங்கக் கடல் பகுதிகள், 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகளில், 20, 21 ஆகிய தேதிகளில் கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Chennai Meteorological Department has forecast heavy rains with thunder and lightning in Salem, Pudukottai, Madurai and Ramanathapuram districts in Tamil Nadu today. Fishermen have been warned of hurricane force winds in the Kumari Sea and Gulf of Mannar tomorrow and the day after tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X