அடேங்கப்பா.. சென்னையில் அடிதூள் கிளப்பிய மழை! ஆல் ஏரியாலயும் அடிச்சு கலக்கிருச்சு
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கின்றனர்.
Recommended Video
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

வானிலை மையம் எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்தது.

தென் மாவட்டங்கள்
இன்று மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23 ஆகிய தேதிகளில் வடதமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்தது.

சென்னையில் கனமழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு பலத்த காற்றுடன் மாநகரின் முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடுமையான காற்று வீசியதால் சாலையில் இருந்த பேரிகாடுகள் சாய்ந்தன.

எல்லா ஏரியாக்களிலும் மழை வாசம்
சென்னை பிரதான பகுதிகளான சேத்துப்பட்டு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம், டிடிகே சாலை, மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர், அமைந்தகரை, வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை வளசரவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், மாம்பலம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் நல்ல மழை பெய்தது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications