ஏன் சொல்லவில்லை? மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி.. பரபரத்த தலைமைச்செயலக அதிகாரிகள்!
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் சில தலைமைச்செயலக அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசியதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த மிக கனமழைக்கு சென்னை தயாராகிக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த கனமழையின் பாதிப்பே இன்னும் சென்னையில் சரி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்றில் இருந்து சென்னையில் மீண்டும் தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் சென்னை சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வார வெள்ளத்தின் போது உடனுக்குடன் பல இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரிகளும் நிரம்பி உள்ளன. மீண்டும் இன்னொரு மழையை சென்னை தாக்கு பிடிக்குமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

வெள்ளம் ஏற்பட கூடாது
சென்னையில் வெள்ளம் ஏற்பட கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருந்தது. வெள்ளம் வந்த போது கூட மோட்டார் வைத்த 12-24 மணி நேரத்தில் தண்ணீர் நீக்கப்பட்டது. ஆனால் இதுவும் கூட ஏற்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. 2015ல் ஏற்பட்டது மீண்டும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சாலைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கியது.

மழைக்கு முன்பே மீட்டிங்
சென்னையில் இப்படி வெள்ளம் ஏற்பட கூடாது. மற்ற மாவட்டங்களும் வெள்ளத்தில் பாதிக்க கூடாது என்பதால்தான் முதல்வர் ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி நிர்வாகிகள், தலைமைச்செயலக அதிகாரிகளுடன் முதல்வர் மீட்டிங் நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடனும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார்.

தலைமை செயலாளர் அறிவுரை
அதேபோல்தான் தலைமை செயலாளர் இறையன்பும் கூட 4 மாதங்களுக்கு முன்பே சாலைகளை புனரமைக்கும் போது புதிய சாலைகள் போட வேண்டும். பழைய சாலைகள் மீதே போட கூடாது. பழைய சாலைகளை சுரண்டிவிட்டு போட்டால்தான் சாலைகளில் நீர் தேங்கி, மழை நீர் வீடுகளுக்குள் செல்லாது, வீடுகள் தாழ்வாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதையும் மீறி சென்னையில் ரோடு மீதே ரோடுகள் போடப்பட்டது.

ஆனால் எல்லாமே நடந்தது
இதனால் வீடுகள் இருக்கும் பல பகுதிகள் பள்ளமானது. அதேபோல் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் வசதி சரியாக வைக்கப்படவில்லை. மாநகராட்சி குடிநீர் வடிகால் வசதி மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் வெள்ள நீர் வடிகால் பெரும்பாலான இடங்களில் முறையாக கட்டப்படவில்லை. இதுவும் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக. தலைமைச்செயலக மீட்டிங்கிலேயே வெள்ளம் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி முதல்வர் குறிப்பிட்டு இருந்தார்.

டிசம்பர்
நவம்பர், டிசம்பரில் மழை பெய்யும். இதனால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முதல்வர் மீட்டிங்கிலேயே கூறி உள்ளாராம். இதற்கு அதிகாரிகள் இந்த முறை வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை. எல்லாம் தயாராக இருக்கிறது. நீர் வடியும் வசதி இருக்கிறது என்று மீட்டிங்கில் உறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் மழை வந்த பின்தான் வடிகால்கள் சரியாக இல்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

அதிகாரிகள் ஏன் சொல்லவில்லை
இதனால் தலைமை செயலக அதிகாரிகள் சிலர் மீது முதல்வர் கோபத்தில் இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கள நிலவரத்தை சரியாக தெரிவிக்கவில்லை. களத்தில் சென்ற சரியாக பார்க்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சொதப்பிவிட்டார்கள். வெள்ள வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. மீட்டிங்கிலும் அதை பற்றி தெளிவாக தெரிவிக்கவில்லை என்று சில அதிகாரிகள் மீது முதல்வர் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு கண்டுபிடிப்பு
இதை பற்றி ஏன் மீட்டிங்கில் முழுமையாக சொல்லவில்லை என்றும், அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வருகின்றன. இதனால்தான் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி தீவிரமாக ஆய்வு பணிகளை செய்து வருகிறார் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னையில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதை கண்டிப்பாக தமிழ்நாடு அரசு விசாரிக்கும்.

விசாரணை நடக்கும்
டிசம்பருக்கு பின் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன்பின் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வரும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் முறையாக விசாரிப்போம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications