வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் ராமநாதபுரத்தில் கனமழை... சூறாவளி வீசும் - வானிலை மையம்
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. நிவர், புரேவி புயல்களால் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வருகின்றன.
கடந்த சில நாட்களாக மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

கடலோர மாவட்டங்களில் மழை
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

வெப்பநிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

பலத்த காற்று வீசும்
வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாகப்பட்டினத்தில் 13 செமீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது, திருத்துறைப்பூண்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செமீ , தலைஞாயிறு, வேதாரண்யம் , திருத்துறைப்பூண்டி தலா 6 செமீ, அய்யம்பேட்டை 5 செமீ, குடவாசல், காரைக்கால் , பாண்டவையர் ஹெட், புவனகிரி தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மன்னார்குடி,திருவாரூர், தரங்கம்பாடி, பாம்பன், ராமநாதபுரம், மதுக்கூர், வட்டானம், சிதம்பரம்,செந்துறை,திருவிடைமருதூர் ராமேஸ்வரம், கிராண்ட் அணைக்கட்டு, நன்னிலம், கொள்ளிடம், புள்ளம்பாடி, மண்டபம், சீர்காழி பகுதிகளில் தலா 3 செ.மீ.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications