சென்னையில் டிசம்பர் வரை மழையா?.. 2015 ரிட்டர்ன்ஸ்?.. நம்பவே நம்பாதீங்க.. வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டிசம்பர் வரை விடாமல் மழை பெய்யும், பெரிய வெள்ளம் ஏற்பட போகிறது என்றெல்லாம் நிறைய செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற தகவல்கள் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுக்க கடந்த 48 மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 26க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை

ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பெய்து வரும் மழை வெறும் டீசர்தான். வடகிழக்கு பருவமழை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேல்தான் காற்றழுத்த தாழ்வு நிலவு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

நாளை தாழ்வு நிலை உருவான பின் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் அப்போது மழை பெய்யும். ஆனால் இந்த தாழ்வு நிலை எவ்வளவு வலுவாக இருக்கும். புயலாக மாறுமா? புயலாக மாறினாலும் தமிழ்நாடு பக்கம் வருமா? என்பதெல்லாம் இப்போது கணிக்க முடியாது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஓரளவு கூடுதலாக மழை கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.

ஆனால் வதந்தி

ஆனால் வதந்தி

ஆனால் அதற்குள் தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்ய போகிறது. நேற்று பெய்தது போல சென்னையில் விடாமல் மழை பெய்யும் என்று வாட்ஸ் ஆப்பில் நிறைய வதந்திகள் பரபரப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் டிசம்பர் வரை விடாமல் மழை பெய்யும். புயல் காரணமாக மழை அதிகரிக்கும். இதனால் 2015ல் ஏற்பட்டது போன்ற வெள்ளம் ஏற்படும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற தகவல்கள் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    14 மாவட்டங்களுக்கு Orange Alert.. 7 மாவட்டங்களுக்கு Yellow Alert எச்சரிக்கை
    காலநிலை மாற்றம்

    காலநிலை மாற்றம்

    காலநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற மழை, வெள்ளம் ஏற்படும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது அப்படியே உண்மை கிடையாது. இப்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும். ஆனால் டிசம்பர் வரை மழை பெய்யும் என்று எந்த வானிலை ஆய்வாளரும் தெரிவிக்கவில்லை.

    டிசம்பர்

    டிசம்பர்

    பெரிய புயல் வரும், 2015 போல வெள்ளம் ஏற்படும் என்றெல்லாம் இதுவரை எந்த வானிலை ஆய்வு மைய கணிப்பும் வெளியாகவில்லை. பல்வேறு தனியார் வானிலை ஆய்வாளர்கள் இந்த வாட்ஸ் ஆப் வதந்திகளை மறுத்துள்ளனர். சென்னை வெதர் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீண்ட கால வானிலை முன் அறிவிப்புகளை வழிகாட்டுதலாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை நிகழ்கால வானிலை அறிக்கை போல பயன்படுத்த கூடாது.

    டிசம்பர்

    டிசம்பர்

    மேலும் டிசம்பர் வரை மழை மற்றும் வெள்ளம் போன்ற சில வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படுகின்றன... இது உண்மை இல்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் உங்கள் விருப்பப்படி நம்பகமான வானிலை ஆய்வாளரின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள்.. மற்ற விஷயங்களை நம்ப வேண்டாம், என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி சென்னையில் டிசம்பர் வரை மழை பெய்யும், 2015 போல ஆகும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+