தமிழ்நாட்டில் நீடிக்கும் கனமழை.. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை; தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் மீண்டும் தீவிர கனமழை அதிகரித்து உள்ளது. நேற்று இரவில் இருந்து டெல்டா மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை விடாமல் பெய்து வருகிறது.
இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இதனால் மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு இதனால் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலை முழுக்க வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கனமழையால் ஏற்கனவே பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கப்பட்டன. அதேபோல் சேலம் மாவட்ட சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் இன்று மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது.
கனமழை காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் மேலும் சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications