சென்னையில் பரவலாக கனமழை.. இட்லி குண்டானிலிருந்து பிரிட்ஜுக்குள் வந்த ஃபீலிங்.. மக்கள் ஆரவாரம்!
சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி நேற்று முன் தினம் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

கனமழை
இந்த நிலையில் காலை 11.30 மணிக்கு முகப்பேர் கிழக்கு, மேற்கு, அண்ணாநகர், அம்பத்தூர், நொளம்பூர், வளசரவாக்கம், கோயம்பேடு, கே.கே.நகர், விருகம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், மதுரவாயல், நெற்குன்றம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் மகிழ்ச்சி
இத்தனை தினங்களாக காலை 8 மணிக்கெல்லாம் சுளீர் என வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் வடகிழக்கு பருவமழையும் பலனை கொடுத்த நிலையில் தற்போது இந்த கோடை மழை மக்களை கொள்ளை கொண்டுள்ளது.

கனமழை
மேலும் 10 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் 1.5 மீட்டர் உயரத்திற்கு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இந்த மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.

கனமழை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தி.மலை, சேலம், தருமபுரி, நெல்லை, குமரி, கோவை, தென்காசியில் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications