இரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு ஆங்காங்கே மழை அவ்வப்போது பெய்து வருகிறது. தமிழகத்தில் மழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் சென்ற வாரமே கூறி இருந்தது.

உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீச போகிறது. இதனால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்கிறது.
நேற்று இரவு முழுக்க இதனால் கோவையில் மழை பெய்தது. அதேபோல் சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications