சென்னையில் மீண்டும் தொடங்கிய கனமழை.. பல பகுதிகளில் புரட்டி எடுக்கிறது.. ஏரிகள் நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் பிற்பகலுக்கு பின் மீண்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் நிலையில் மழை பெய்து வருகிறது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சனிக்கிழமையில் இருந்து தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை அன்றே ரெக்கார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு 207 மிமீ மழை சென்னையில் பெய்தது.
அதன்பின் ஞாயிறு, திங்கள் அன்று சென்னையில் குறைந்த மழை நேற்று தீவிரம் எடுத்தது. நேற்று இரவு முழுக்க சென்னையில் மழை தீவிரம் எடுத்தது. இந்த நிலையில்தான் நேற்று பிற்பகல் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வலுப்பெற சென்னையில் மழை வேகம் எடுத்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. அதன்பின் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர தொடங்கியதால் டெல்டாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைந்து கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் மழை பெய்ய தொடங்கியது.

ஆழ்ந்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு பகுதி ஆழ்த்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. நாளை தாழ்வு மண்டலமாக இது மாறி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே இது கரையை கடக்கும். இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தீவிர மழை பெய்யும். இந்த நிலையில்தான் சென்னையில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் நிலையில் சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

எங்கு
சென்னையில் கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும், எழும்பூர், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழையே பெய்து வருகிறது. ஆவடியில் மிக கனமழை பெய்து வருகிறது.

லேசான மழை
மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நேரம் செல்ல செல்ல மழை தீவிரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மழையால் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஆவடியில் பெய்து வரும் மழையால் அந்த பகுதியே கடல் போல காட்சி அளிக்கிறது.

அணை
சென்னையில் மழை பெய்து வரும் ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தலா 1000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. செம்பரம்பாக்கத்தில் 74 சதவிகித தண்ணீர் உள்ளது. பூண்டியில் 80 சதவிகித தண்ணீர் உள்ளது. புழலில் 82 சதவிகிதம் வரை தண்ணீர் உள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications