இரவு 10 மணி வரை பிச்சு உதறப் போகுது மழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரு புறம் வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் மழையும் அடித்து ஊற்றுகிறது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்தது. தமிழகத்தின் 17 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்படி ஒருபக்கம் வெயில் சுட்டெரித்தாலும் மறுபக்கம் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Heavy Rain Till 10 PM Orange Alert Issued for 3 Tamil Nadu Districts

ஆரஞ்சு நிற எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.

இதேபோன்று இன்று இரவு 10 மணி வரை தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

வெயில் சதமடித்த இடங்கள்

அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் 104.72°F (40.4°C), மீனம்பாக்கம் 106.88°F (41.6°C), கடலூர் 100.22°F (37.9°C), தர்மபுரி 102.2°F (39°C), ஈரோடு 105.08°F (40.6°C), கரூர் பரமத்தி 104°F (40°C), மதுரை நகரம் 104°F (40°C), மதுரை விமான நிலையம் 103.28°F (39.6°C), நாமக்கல் 101.84°F (38.8°C), பாளையங்கோட்டை 101.3°F (38.5°C), பரங்கிப்பேட்டை 100.76°F (38.2°C), சேலம் 100.58°F (38.1°C), தஞ்சாவூர் 102.2°F (39°C), திருப்பத்தூர் 100.58°F (38.1°C), திருச்சி 104.18°F (40.1°C), திருத்தணி 107.78°F (42.1°C) மற்றும் வேலூர் 108.5°F (42.5°C) ஆகிய இடங்களில் சதமடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+