இன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. கவனமாக இருங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகம் முழுக்க இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுக்க இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. சென்னையில் அதிக அளவில் இதனால் மழை பெய்து வருகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மழை குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் அதை சரி செய்யும் வகையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து மீண்டும் மழை சூடுபிடிக்க உள்ளது.

என்ன காரணம்
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும். இன்றும் நாளையும் மழை பெய்யும். இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கண்டிப்பாக கனமழை பெய்யும்.

எங்கு எல்லாம் பெய்யும்
அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூரில் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். சென்னையில் காலை முதல் இரவு முழுக்க கனமழை பெய்யும். நீலகிரியில்தான் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக மழை பெய்யும்.

கடல் எப்படி
குமரி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள்
இந்த மழை காரணமாக சில இடங்களில் பயிர்கள் பாதிக்கப்படும். பொங்கலுக்கு முன்பான விவசாயம் சில இடங்களில் பாதிக்கப்படும். அதே சமயம், அணைகள் இதனால் நிரம்ப வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications