அடிக்கிற வெயிலுக்கு இதமாக இடி மின்னலுடன் கனமழை பெய்யும் - வானிலையின் ஜில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென் மாவட்டங்களில் செப்டம்பர் 18ஆம் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழைக்காலமாக இருந்தாலும் அக்னி நட்சத்திர காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டத்தில் 103 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவலாவில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, கூடலூர் பஜார், நடுவட்டம் பகுதியில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் 19ஆம் தேதி வரைக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தால் மழை
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை
செப்டம்பர் 18ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள்
செப்டம்பர் 19ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்றும் நாளையும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழக தென் மாவட்டங்களில் பங்குனி வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் வானிலை மையத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications