Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடி மின்னலுடன் கொட்டிய மழை..முறிந்து விழுந்த மரங்கள்..பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்துள்ளன. தீயணைப்பு வீரர்களும் மாநகராட்சி ஊழியர்களும் மரங்களை அப்புறப்படும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மட்டுமே அதிக அளவில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கும். புயல்கள் உருவாகி பெய்யும் மழையால் வெள்ளம் பெருக்கெடுக்கும். இந்த நிலையில் ஜூன் மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

Heavy rain with Thunderstorms in Chennai trees fell flights diverted to Bangalore

இந்த மழைக்கு காரணம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சிதான் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புபுள்ளதாக கூறியது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே மழை பெய்துள்ளது.

அதேபோல இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain with Thunderstorms in Chennai trees fell flights diverted to Bangalore

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், இப்பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் நகர் பகுதிகளிலும் வடசென்னை, தென் சென்னை, புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், கொரட்டூர், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், வேளச்சேரி, தாம்பரம், பல்லாவரம், பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்தது. சென்னையில் நேற்று காலையில் தொடங்கிய மழை நேற்று இரவு வரை விட்டு விட்டு பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுளளனர்.

மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பதிவாகியுள்ளது. தரமணி, நங்கநல்லூரில் 12 செமீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 11 செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அதே போல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருவாரூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Heavy rain with Thunderstorms in Chennai trees fell flights diverted to Bangalore

சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வெள்ளநீரில் இறங்கிய வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றன. வெள்ள நீரை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள கிண்டி, கத்திப்பாரா பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை நீடிப்பதால் சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+