தென் தமிழகத்தில் 2 நாட்களுக்குத் தட்டி எடுக்கப்போகும் கனமழை...சென்னையில் மேகமூட்டம்தானாம்

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளைய தினமும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கயத்தாறு, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளத்தில் தலா 9 செமீ மழை பதிவானது. கயத்தாறு ARGயில் 8 செமீ மழை பதிவானது.

முதுகுளத்தூரில் 7 செமீ மழையும், பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டத்தில் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்), திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்), கடலாடி (ராமநாதபுரம் மாவட்டம்), தேக்கடியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. அரண்மனைப்புதூர் (தேனி மாவட்டம்), மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்), சூரங்குடி (தூத்துக்குடி மாவட்டம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்), சிவகிரி (தென்காசி மாவட்டம்), கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் பல மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு

மிக கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இரண்டு நாட்களுக்கு மழை

இரண்டு நாட்களுக்கு மழை

நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் , தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் மழை

மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் மழை

15 மற்றும் 16ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+