விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்
சென்னை: சென்னையில் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். பைக்கில் இரண்டு பேர் சென்றாலே வளைத்து பிடித்து ரூ.500 அபராதம் விதிக்கிறார்கள்.
மாஸ்க் அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, ஐந்தாவது கட்டமாக வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, அனைத்து வகை தொழில்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை
எனினும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் சென்னையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மதிக்கவில்லை
டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல சென்னையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் பாதிப்புகளை உணராமல் எப்போதும் போல் இயல்பாக வாகனங்களில் பயணிக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியது போன்று சென்னையில் காணப்படுகிறது.

அபராதம் விதிப்பு
இந்நிலையில் . சென்னையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவதால், அரசு விதித்த கட்டுப்பாடுகளை போலீசார் நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர்.

மாஸ்க் அணியாவிட்டாலும்
மேலும் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் வாகன ஓட்டிகளிடம் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் தவிர தேவை இல்லாமல் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications