ஸ்தம்பித்த சென்னை.. விடுமுறை முடிந்து வரும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றனர். நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களில் சென்னை திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் 12 நாள் விடுமுறை வழங்கப்பட்டது. டிசம்பர் 24ம் தேதியில் தொடங்கிய விடுமுறை இன்று வரை இருந்தது. மேலும் இந்த விடுமுறையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் வந்தன.

இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளுடன் வந்தனர். இதற்கிடையே தான் அரையாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதனால் வெளியூர்களில் உள்ள மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுது. உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி முதல் சென்னை வரை பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி, சிங்கம்பெருமாள் கோவில் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த போக்குவரத்து நெரிசல் என்பது பிற பண்டிகை காலங்களை ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவாக தான் உள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதனை ஒப்பிடும்போது இன்று போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைவு தான். இது வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications