பெருங்களத்தூரில் பிஸி.. கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணிகள்.. சென்னையில் ஒரே நாளில் 3.58 லட்சம் பேர்?
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருப்பதால், சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில், நேற்று மட்டும் 3.58 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்களாம்..!!
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர்.. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறைகள் உள்ளதால், பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகிறார்கள்.

பஸ் ஸ்டாண்டு: சென்னையை பொறுத்தவரை, மக்களின் வசதிக்காகவே, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது.. ஆனாலும், வாகன நெரிசல் பெருகியே காணப்படுகிறது..
சென்னையில் இருந்து 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 பேருந்துகள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன... குறிப்பாக, சென்னையின் 6 இடங்களிலிருந்து பஸ்கள் கிளம்பி செல்கின்றன.. அதாவது, கிளாம்பாக்கம், சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, குரும்குளம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன..
இதைத்தவிர, கார்கள், வேன்கள், ஆம்னிகளில் பொதுமக்கள் ஊர்களுக்கு கிளம்பி செல்கிறார்கள். இதன்காரணமாக, நேற்றுமுதலே சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.. முக்கியமாக, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது... நேற்று சாயங்காலம் முதலே, வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்ல துவங்கின..
தென்மாவட்டம்: விழுப்புரம், திருச்சி உள்பட தென்மாவட்டங்களுக்கு இந்த சாலை வழியாக ஏராளமானவர்கள் சென்றதால் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அதிக கூட்டம் காணப்படும்.. ஆனால், இந்த முறை கிளாம்பாக்கம் திறந்துவிட்டுள்தளால், ஜிஎஸ்டி ரோட்டில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததை காண முடிந்தது..
சென்னையில் இருந்து நேற்று மட்டும் 3.58 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்களாம்.. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும், 2,100 பஸ்களோடு, 901 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன... இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு கவனத்தையும் செலுத்தினார்கள்..
போலீசார்: அதேபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில், வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன என்றாலும்,முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க, பயணியர் கூட்டம் அலைமோதியது.. இதனால், அவர்களை போலீசார் வரிசையில் நிறுத்தி அனுப்பி கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில், கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல, பயணிகளின் உடைமைகளில் சோதனை நடத்திய பிறகே, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை...யினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள்: இதனிடையே, அரசு பஸ்களில் மட்டுமே நேற்று ஒரேநாளில் 1.75 லட்சம் பேர் வரை பயணம் செய்திருக்கிறார்கள் என்றும், இன்றைய தினமும் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் இருந்து, 1,901 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்,'' என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே தகவல்: அதேபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூருக்கு, 1.50 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.. ஆம்னி பஸ்களில், 60,000த்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications