பெருங்களத்தூர் டூ வண்டலூர் இடையே கடும் நெரிசல்.. இரணியம்மன் கோவில் பிரச்சனை.. அரசு தலையிட கோரிக்கை
சென்னை: பெருங்களத்தூர் டூ வண்டலூர் இடையே நெரிசல் ஏற்பட்டு வரும் இடம் என்றால், அது இரணியம்மன் கோவில் தான். காலை மற்றும் மாலை நேரங்களில் பெருங்களத்தூரை கடந்து சென்றால், வண்டலூரில் நுழையும் முன்பு கடுமையான நெரிசல் இருக்கும். தீபாவளி பண்டிகையொட்டி பலரும் சொந்த ஊர் செல்கிறார்கள். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள கோயிலை சற்று பின்னால் உள்ள தனியார் ஐடி நிறுவன இடத்தில் மாற்றியமைக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த சாலையில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இரணியம்மன் கோயில் தான் காரணமாக இருக்கிறது. இந்த கோயில் என்பது திடீரென உருவானது அல்ல. பல ஆண்டுகளாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் சொந்த ஊர் செல்லும் நிலையில், பெருங்களத்தூரை தாண்டியதுமே கடும் நெரிசலில் சிக்குவார்கள்.

அதன்பிறகு கோயிலை தாண்டியதும் இயல்பான போக்குவரத்து இருக்கும். இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்பட எந்த வாகனமும் தப்ப முடியாத நிலை தான் இருக்கிறது. அதாவது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு சற்று தள்ளி வரை 5 லேன் இருக்கும் சாலை இரணியம்மன் கோவில் பகுதியில் 3 லேன் ஆகிவிடும். பின்னர் கோவிலை தாண்டியது மறுபடியும் 4 லேனா மாறும். இந்த கோயில் உள்ள இடம் தான் நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. இது ஒருபுறம் எனில், இரணியம்மனை, சாலையில் பயணிப்பவர்களைப் பாதுகாக்கும் தெய்வமாக வழிபடப்படுவதால், தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இங்கு நின்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதும் நெரிசலுக்குக் காரணமாகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம்.. இரணியம்மன் கோவில் என்பது பெருங்களத்தூர், வண்டலூர் மக்களின் முக்கியமான காவல் தெய்வம் ஆகும். இந்தக் கோயிலை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டன. ஆனால் நடைமுறை செயல்பாட்டில் இன்னும் தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டில், கோயிலுக்கு பின்புறம் உள்ள ஐடி நிறுவனம் புதிய கோயில் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) 10.4 சென்ட் நிலத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால்,தனியார் நிறுவனம் கொடுக்க முன்வந்த இடத்தில் வீராணம் குடிநீர் குழாய் செல்கிறது. அங்கு கோயில் எழுப்ப இயலாது என கருதிய கிராம மக்கள், குடிநீர் குழாய்க்கு சேதம் ஏற்படாத வகையில் சற்று தள்ளி 15 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அந்த தனியார் நிறுவனம் இந்த இடத்தை ஒதுக்க காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து வருவாய்த் துறையினர் பலமுறை அந்த நிறுவனத்தை அணுகியபோதும், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு முறையான பதிலும் கிடைக்கவில்லை என்று கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி சொல்லப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை விரிவாக்க பணியும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பெருங்களத்தூரில் காலை, மாலை நேரங்களில் தினசரி கடுமையான போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாக உள்ளது. கோயிலை பின்னால் உள்ள தனியார் ஐடி நிறுவன இடத்தில் மாற்றினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு வரும் என்பதால் தொடர்கதையாக நீடிக்கிறது. அரசு தலையிட்டால் உடனே பிரச்சனைக்கு விடிவு கிடைக்கும் என்பதுடன், நெரிசலுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும். உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications