ஹெலிகாப்டர் விபத்து: மாரிதாஸ் போல் அவதூறாக பதிவிட்ட இளைஞர்: வதந்தி பரப்பும் ட்விட்டர் பதிவால் கைது
ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவது, தவறாக பதிவு செய்வதை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணிக்கிறார்கள், தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை வரும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், விபத்து குறித்து தவறான கருத்தை பதிவிட்ட ஷிபின் என்கிற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பலி
ஊட்டி வெலிங்டன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த முப்படை தளபதி அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள். விபத்து குறித்து ஆய்வு நடத்த கருப்புப் பெட்டியை தேடி கண்டுபிடித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விமானப்படை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர். அதேபோல் தமிழக காவல்துறையில் ஏடிஎஸ்பி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

உடல் அடக்கம் முன்னரே தொடங்கிய வதந்திகள்
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என வதந்திகள் பல கிளப்பி விடப்பட்டன, சமூக வலைதளங்களில், வாட்ஸ் ஆப் களில் சுடப்பட்டதால் விபத்து என்றெல்லாம் பரப்பினர். ஆனால் நிபுணர்கள் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முடியாது என விளக்கம் அளித்தனர். இன்னும் சிலர் சீன சதி, நக்சல் சதி, அமெரிக்க கோபம் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர்.

விசாரணை முடியும் முன்னரே நச்சுக்கருத்துகள்
விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்பதை அதுகுறித்து நடத்தப்படும் விசாரணை, தடயவியல் விசாரணை உள்ளிட்ட பல விஷயங்களுக்குப்பின் வெளிவரும். பல விசாரணை அமைப்புகள் மிகுந்த சிரமத்துக்குப்பின் கண்டுபிடிக்கும் முடிவை சிலர் எளிதாக மனம் போன போக்கில் இதுதான் காரணம் என பதிவிடுவதும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை ஆதரித்து பதிவிடுவதும் சமூகத்தில் பதற்றத்தை அதிகரித்துவிடும்.

கண்காணிக்கும் சைபர் க்ரைம், உளவுத்துறை போலீஸ்
சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்தை வெளியிட்ட மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 153, 505(2) உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதேப்போன்று பலரும் ட்விட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்துகளை பரப்புகின்றனர். இவைகளை சைபர் க்ரைம், நுண்ணறிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள். அதேப்போன்று பதிவிட்ட நாகர்கோயிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சிக்கினார்.
நக்சல்கள் தாக்கு, 95% தமிழர்கள் தேச விரோதிகள்
நாகர்கோவில் புதுமடத்தைச் சேர்ந்த இளைஞர் ஷிபின் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். ஒன்றில் விபத்து நடந்தது குறித்து அது விபத்து அல்ல என்கிற பாணியில் எழுதி விபத்துக்கு பின்னால் பெரிய சதி இருக்கலாம் விபத்து நடந்த பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதி என ஏதோ உளவுத்துறை அதிகாரிபோல் வதந்தியை பரப்பி இருந்தார். அதேபோல் தமிழகம் 95% தேசவிரோதிகளை கொண்ட மாநிலம் என பதிவிட்டிருந்தது சமூகத்தில் கலவரச்சூழலை ஏற்படுத்தும் பதிவு.

மாரிதாஸ் பாணியில் பதிவு சிக்கிய இளைஞர்
புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் சமூக வலைதளம் அவதூறாகவும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு இடையூறாக பதிவிட்டதன் மூலம் அவர் மீது ஐபிசி 153A, 505/1 b, 504 (இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சித்தல், அவதூறு பரப்புதல் , சமூக வலைதளம் மூலம் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகைகளில் செயல்படுதல், குழுவில் கலகம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் ஷிபினை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications