வணக்கம் சென்னை.. இது உங்களின் 3வது சதுப்பு நிலக்காடு.. பள்ளிக்கரணை பாணியில் பிரம்மாண்டம்
சென்னை: சென்னையில் தற்போது பழவேற்காடு, பள்ளிக்கரணை ஆகிய இரண்டு சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இந்த காடுகள் தான் காங்ரீட் பாலைவனம் போல் உள்ள சென்னையின் ஜீவாதாரம்.. சென்னையை வெள்ள பாதிப்பில் இருந்து காக்கும் இந்த சதுப்பு நிலக்காடுகள் தான், பெருமழை காலங்களில் சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் முக்கிய 'ஸ்பாஞ்ச்' போலச் செயல்படுகின்றன. இவை தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகின்றன. தற்போது 3வது சதுப்புநிலக்காடுகள் உருவாக்கி வருகிறது தமிழக அரசு.
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராக சுப்ரியா சாகூ வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சென்னைவாசிகளே... இதோ உங்கள் நகரத்தைப் பாதுகாக்க மற்றுமொரு இயற்கைக் கவசம் தயாராகிவிட்டது!

சென்னை வனத்துறை மற்றும் பக்கிங்காம் கால்வாய் இணைந்து, 2025-26 காலக்கட்டத்தில் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் 20,000 சதுப்புநிலக் கன்றுகளை நட்டுள்ளனர். இது சென்னையின் மூன்றாவது பெரிய சதுப்புநிலக் காடு உருவாக்கும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
மீன் முள் கட்டமைப்பு அலைகளின் நீர் ஓட்டம் சீராக இருப்பதற்காக 'பிஷ்போன்' எனப்படும் மீன் முள் வடிவிலான 8 முக்கியக் கால்வாய்கள், 8 துணை கால்வாய்கள் மற்றும் 186 விநியோகக் கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது செடிகள் ஆரோக்கியமாக வளர உதவும்.
பராமரிப்பு: இந்த உன்னத முயற்சிக்கு ஐசிஐசி வங்கி தனது சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் ஆதரவு அளித்துள்ளது.
முந்தைய கட்டங்கள்
2024-25: பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் உள்ள கழிப்பட்டூர் அருகே 12,500 சதுப்புநிலக் கன்றுகள் மற்றும் 2,500 கடற்கரைச் சார்ந்த மரங்கள் நடப்பட்டன. அடையாறு ஆற்று முகத்துவாரப் பகுதியில் 5,000 சதுப்புநிலக் கன்றுகள் நடப்பட்டன.
ஏன் இது முக்கியம்?
தமிழக வனத்துறை எடுத்து வரும் இந்த ஒவ்வொரு அடியும் சென்னையை இயற்கை சீற்றங்களில் இருந்து காக்கும் ஒரு 'உயிருள்ள கவசமாக' மாறும். இந்தச் சதுப்புநிலங்கள் கடல் சீற்றங்களில் இருந்து நகரத்தைப் பாதுகாக்கும். பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வலிமையைச் சென்னைக்குத் தரும். இந்தச் சிறப்பான பணியைச் செய்த சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த தகவலை சுப்ரியா சாகூ தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்து கூறியுள்ளார்.
Hello Chennai here comes your third Mangrove Magic !
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 9, 2026
Along the Buckingham Canal, the Chennai Forest Division has planted 20,000 mangrove seedlings across 20 hectares during 2025–26. What you see here is the fishbone structure to support healthy tidal flow. 8 main fishbone… pic.twitter.com/e01fhd0X5e
பக்கிங்காம் கால்வாய் ஓரம்
இந்த புதிய சதுப்புநிலக் காடு பக்கிங்காம் கால்வாய் ஓரம் அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஓஎம்ஆர் பகுதியில் உள்ள கழிப்பட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் கரைகளில் இந்த 20,000 கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அதேபோல் அடையாறு ஆற்று முகத்துவாரத்தில் 5,000 கன்றுகள் நடப்பட்டன. சென்னையின் தெற்குப் பகுதியான ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் இணைக்கும் பகுதிகளில் உள்ள உவர் நீர் நிலப்பரப்புகளில்தான் இந்த 'லிவிங் பயோஷீல்ட்' எனப்படும் இயற்கை அரண் உருவாக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கரணை
சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை, பள்ளிக்கரணை மற்றும் பழவேற்காடு ஆகிய இரண்டு ஏரிகள் சதுப்பு நில காடுகளுடன் அமைந்துள்ள நிலையில்,இதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நன்னீர் ஏரியாகும். சென்னையின் உபரி நீர் கடலுக்குச் செல்வதற்கு முன் தேங்கும் ஒரு வடிகாலாக இது செயல்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்று ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைக் கிடங்குகளால் இதன் பரப்பளவு குறைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை பொறுத்தவரை சதுப்புநிலக் காடுகள் இயற்கையாகவே அதிகம் காணப்படுகின்றன.
இது மீன்கள், நண்டுகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் (குறிப்பாக ஃபிளமிங்கோக்கள்) தங்குவதற்கு உகந்த இடமாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லையில், அதாவது தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. 3வது ஏரி பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் உள்ள கழிப்பட்டூர் அருகே அமைகிறது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?














Click it and Unblock the Notifications