உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர உதவி.. பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர்
சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாடு அல்லது வெளிநாட்டில் படிப்பை தொடர தேவையான உதவிகள் செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் படிப்பை கைவிட்டு இந்தியா திரும்பியுள்ளனர். இதில் தமிழக மாணவர்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானவர்கள் அங்கு மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைனில் தற்போது அங்கு போர் முடியும் சூழல் இல்லாததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தான் உக்ரைனில் மீட்கப்பட்ட மாணவர்கள் உள்நாடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

முதல்வர் வலியுறுத்தல்
தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்வியை தொடர இயலாமல் நமது மாணவ-மாணவிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு உதவி
இந்த மாணவர்கள் நமது நாட்டில் அல்லது பிற வெளிநாடுகளில் மருத்துவக்கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில் அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனைகள் தரம் உயர்வு
இதுதவிர தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்கு முக்கிய திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் ரூ.1091 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

உயர்நிலை அமைப்பு
ஆய்வின்படி மனஅழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மனநல மருத்துவ பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது. இதனால் சென்னை கீழ்பாக்கத்திள்ள மனநல மருத்துவமனை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
Recommended Video

தரம் உயர்வு
இப்பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி, தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். தேசிய ஊரக சுகாதார இயக்க திட்டத்துக்கு ரூ.1906 கோடி, அவசர ஊர்தி சேவைகளுக்கு ரூ.304 கோடி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.817 கோடி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மட்டும் ரூ.17,901.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் கூறினார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications