கண்டிஷன் பட்டாவுடன் வழங்கப்பட்ட சீலிங் நிலத்திற்கு எப்படி பட்டா வாங்குவது?
சென்னை: அரசாங்கத்தால் கண்டிசன் பட்டாவுடன் வழங்கப்பட்ட ceiling நிலத்திற்கு எப்படி அயர்ன் பட்டா வாங்குவது? என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து சுயதொழில் தொடங்குவோம் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசு இலவச பட்டா அல்லது சலுகை விலையில் பட்டா வழங்கும் போது பட்டாவில் நிபந்தனைகளை குறிப்பிட்டு வழங்குவார்கள். கட்டாயம் அந்த நிபந்தனைகளுக்கு பட்டாவை பெற்ற பயனாளியும் அவரை சார்ந்தவர்களும் கட்டுப்பட வேண்டும்.

குறிப்பாக பட்டாவில் 7 ஆண்டுகள் 14 அல்லது 30 ஆண்டுகள் பட்டா சொத்தின் மீது வில்லங்கம் (சொத்து உரிமை மாற்றம்) செய்ய கூடாது என்று நிபந்தனை இருக்கும் அந்த காலம் முடியும் வரை பட்டாதாரர் அந்த சொத்தினை வில்லங்கம் செய்யாமல் அனுபவித்து வரவேண்டும் நலிந்த பிரிவை சார்ந்தவர்கள் இலவச பட்டாவில் பெற்ற சொத்தினை பணத்திற்காக அவசர தேவைக்காக விற்று விட கூடாது.
அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி பணம் படைத்தவர்கள் அபகரித்து விட கூடாது என்பதற்காக இந்த நிபந்தனையை அரசு விதிக்கின்றது. நிபந்தனைக் காலம் முடிந்த பிறகு முழு சொத்துரிமையை பயனாளி அடைகிறார்.
வேறு நிபந்தனைகள்
1. குறிப்பிட்ட கால கெடுவில் பட்டா சொத்தில் வீடு கட்ட வேண்டும்
2. பட்டியல் இன (தாழ்த்தப்பட்ட) வகுப்பைச் சார்ந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு உரிமை மாற்றம் செய்ய கூடாது.
3. விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கும் நேர்வில் கட்டாயம் விவசாயம் செய்ய வேண்டும்
என்பது போன்ற நிபந்தனைகள் பட்டாவில் இருக்க வாய்ப்புள்ளது. அரசிடம் முன் அனுமதி பெறாமல் பட்டா நிபந்தனையை தளர்த்த உத்திரவு பெற்றுக் கொள்ளாமல் பட்டா நிபந்தனையை மீறினால் பட்டாவை ரத்து செய்து விட்டு அரசு சொத்தினை கைப்பற்றிக் கொள்ளும். கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியர் ஆகியோர் காலகிரமத்தில் நிபந்தனை பட்டாவில் விதி மீறல் இருக்கிறதா என்பதை கண்காணித்து வரவேண்டும். கிரையம் போன்ற சொத்து உரிமை மாற்ற ஆவணம் மூலம் பெற்ற சொத்துக்கு பட்டா வழங்கும் போது நிபந்தனை விதிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications