சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. வேளச்சேரியில் அதிகபட்ச வாக்காளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2022 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, ,6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெயர் சேர்க்கப்படாமல்

பெயர் சேர்க்கப்படாமல்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2004 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6ஐ பூர்த்தி செய்தும் பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும் பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும் சட்டசபை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏவை பூர்த்தி செய்தும் , அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 1.11.2021 முதல் 30.11.2021 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

திருத்தங்கள்

திருத்தங்கள்

மேலும் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய நாட்களில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடிகள்

சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளும் குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டசபை தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,94,505, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,61,473, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 1,083 என மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 40,57,061 ஆகும்.

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டம்

நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19.92,198 ஆண் வாக்காளர்கள், 20,67,767 பெண் வாக்காளர்கள், 1073 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,54,038 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் 10,621 ஆண் வாக்காளர்கள், 11,862 பெண் வாக்காளர்கள், 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,492 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெண் வாக்காளர்கள்

பெண் வாக்காளர்கள்

மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள், 12,568 பெண் வாக்காளர்கள், 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளது.

குறைந்தபட்சம்

குறைந்தபட்சம்

வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டசபை தொகுதியில் 1,76,679 வாக்காளர்களும் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 3,15,502 வாக்காளர்களும் உள்ளனர். ஜனநாயகத்தை வலுப்படுத்த தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தேட்டுக் கொள்ளப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+