அடித்து ஆடும் எடப்பாடி பழனிச்சாமி.. 30, 15 எல்லாம் இல்லை! தனிமரமான ஓபிஎஸ்! உச்சகட்ட பரபரப்பு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எத்தனை பேர் ஆதரவாளர்களாக உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிச்சாமியாக இருக்க வேண்டும் என கடந்த 8 நாட்களாக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என ஓபிஎஸ் போலீஸ் தரப்பை நாடினார். ஆனால் உள் அரங்கில் நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு நாங்கள் அனுமதி மறுக்க முடியாது என கூறிவிட்டனர்.

75 மாவட்டச் செயலாளர்கள்
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் 69 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அது போல் அதிமுக வளர்ச்சி பெற எடப்பாடி தலைமையேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

5 மாவட்டச் செயலாளர்கள்
ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 5 மாவட்டச் செயலாளர்களே ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், தஞ்சை வைத்திலிங்கம், பெரம்பலூர் குன்னம் ராமசந்திரன் ஆகியோர் ஆவர். இவர்களுடன் மனோஜ் பாண்டியன், தர்மர் உள்ளிட்டோரும் உள்ளனர்.

ஓபிஎஸ் வலது கரம்
ஓபிஎஸ்ஸுன் வலது கரமாக கருதப்பட்ட வேளச்சேரி அசோக், தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்பி மைத்ரேயன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அணி மாறிவிட்டார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைத்திலிங்கம் ஓபிஎஸ்ஸுக்கு 15 மாவட்டச் செயலாளர்கள் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்றார்.

எடப்பாடி தரப்பு
அது போல் மேலும் 15 மாவட்டச் செயலாளர்கள் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று களநிலவரத்தை பார்த்தால் ஓபிஎஸ் பக்கம் வெறும் 5 மாவட்டச் செயலாளர்களே உள்ளனர். அவர்களையும் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்கள் பக்கம் இழுக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications