என்னாது எடப்பாடி இல்லையா! சையது பேட்டையா? ஐயோ ஊர் பெயர்களில் இம்புட்டு சங்கதி இருக்கா?
சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்களில் பல ஊர்களுக்கு இப்போது அழைக்கப்படும் பெயர்கள் ஒரிஜினல் இல்லையாமே.
பொதுவாகவே ஒரு பெயர் மருவி புது பெயரே பேச்சு வழக்கில் இருந்து வரும். இதனால் அந்த ஊரின் பழைய பெயர் மறந்தே போகும். உதாரணமாக கோடம்பாக்கம் என்பது கோடாபாக் என அழைக்கப்பட்டது.

கோடா என்றால் இந்தி மொழியில் குதிரை என்பதாகும். பாக் என்ற பகுதி. அதாவது குதிரைகள் கட்டி வைக்கும் பகுதி என்பதாகும். அது மருவி கோடம்பாக்கம் என அழைக்கப்பட்டு வருகிறது. அது போல் கடலோரத்தில் வாழ்ந்த மதராசன் என்ற மீனவத் தலைவனின் பெயரால் வந்ததுதான் மதராஸ் அல்லது மதராசபட்டினம் என சமூகவலைதளங்களில் சொல்லப்படுகிறது.
அது போல் ஜெ. ஜெயலலிதா நகர், ஜெ. ஜெ. நகர் என்றும் கலைஞர் கருணாநிதி நகர், கே.கே. நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
அது போல் கோவையில் பிரசித்தி பெற்ற கோயிலான கோணியம்மன் பெயரில் கோணியம்மன்புத்தூர் என அழைக்கப்பட்ட நிலையில் அது கோயமுத்தூர் என மருவியது என்கிறார்கள். அந்த வகையில் இன்னும் சில தமிழில் உள்ள பெயர்களை பார்க்கலாம்.
இதுகுறித்து இன்பா என்பவரின் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இம்புட்டு சங்கதி இருக்கா... இது தெரியாமத்தான் இத்தனை நாளா இருந்திருக்கோமாக்கும்...
தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!
எடப்பாடி அல்ல;
இடையர்பாடி.
மதுரை அல்ல;
மருதத்துறை.
மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை.
காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்.
சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை.
திருவாரூர் அல்ல;
ஆரூர்.
பொள்ளாச்சி அல்ல;
பொழில் ஆட்சி.
சிதம்பரம் அல்ல;
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்.
கான்சாபுரம் அல்ல;
கான்சாகிபு புரம்.
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)
வத்ராயிருப்பு அல்ல;
வற்றாத ஆறு இருப்பு.
தனுஷ்கோடி அல்ல;
வில்முனை.
இராமேஸ்வரம் அல்ல;
சேதுக்கரை.
இராமநாதபுரம் அல்ல;
முகவை.
காஞ்சிபுரம் அல்ல;
கஞ்சிவரம்.
செங்கல்பட்டு அல்ல;
செங்கழுநீர்பட்டு.
சேர்மாதேவி அல்ல;
சேரன்மகாதேவி.
விருத்தாசலம் அல்ல;
முதுகுன்றம்.
வேளாங்கண்ணி அல்ல;
வேலற்கன்னி.
சைதாப்பேட்டை அல்ல;
சையது பேட்டை.
தேனாம்பேட்டை அல்ல;
தெய்வநாயகம் பேட்டை.
கொசப்பேட்டை அல்ல;
குயவர்பேட்டை.
குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.
புரசைவாக்கம் அல்ல;
புரசைப்பாக்கம்.
பெரம்பூர் அல்ல;
பிரம்பூர்.
சேத்துப்பட்டு அல்ல;
சேற்றுப்பேடு.
அரும்பாக்கம் அல்ல;
அருகன்பாக்கம்.
சிந்தாதரிப்பேட்டை அல்ல;
சின்னத்தறிப்பேட்டை.
உடுமலைபேட்டை அல்ல;
ஊடுமலைப்பேட்டை.
பல்லாவரம் அல்ல;
பல்லவபுரம்.
தாராசுரம் அல்ல;
ராராசுரம்.
ஈரோடு அல்ல;
ஈரோடை.
ஒகனேக்கல் அல்ல;
புகைக்கல்.
தர்மபுரி அல்ல;
தகடூர்.
பழனி அல்ல;
பொதினி.
கும்பகோணம் அல்ல;
குடந்தை.
தரங்கம்பாடி அல்ல;
அலைகள்பாடி.
காவிரிபூம்பட்டினம் அல்ல;
காவிரிபுகும்பட்டினம்.
பூம்புகார் அல்ல;
புகும்புகார்.
ஸ்ரீரங்கம் அல்ல;
அரங்கம்.
திருவையாறு அல்ல;
ஐயாறு.
சீர்காழி அல்ல;
சீகாழி.
வேதாரண்யம் அல்ல;
திருமறைக்காடு.
கல்பாக்கம் அல்ல;
கயல்பாக்கம்.
சேலம் அல்ல;
சேரளம்.
திருத்தணி அல்ல;
திருத்தணிகை.
திருவண்ணாமலை அல்ல;
அண்ணாந்துமலை.
கடலூர் அல்ல
கூடலூர்.
படித்ததில் பகிர்ந்தது
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications