தம்பி கட்டாயப்படுத்தினா கேக்குற ஆளா நீங்க?.. திருச்சி சூர்யாவிடம் வரிச்சியூர் செல்வம் பேசியது என்ன?
கட்டாயப்படுத்தி சொன்னால் கேட்குற ஆளா நீங்க, அன்புக்கு கட்டுப்பட்டவர்- திருச்சி சூர்யாவுக்கு ஆடியோ அனுப்பிய வரிச்சியூர் செல்வம்
சென்னை: நான் மறுபடியும் சொல்கிறேன் காயத்ரி ரகுராம் யாருன்னே எனக்கு தெரியாது. அவருடன் நான் இருக்கும் போட்டோவை எடுக்குமாறு உங்களை கட்டாயப்படுத்தி நான் எடுக்க சொல்லலை, அன்பால அந்த போட்டோவை எடுத்துட்டீங்க என திருச்சி சூர்யாவுக்கு வரிச்சியூர் செல்வம் ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.
வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காயத்ரி ரகுராமுடன் நான் இருக்கும் புகைப்படத்தை திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை, இப்படியெல்லாம் போட்டோவை வெளியிடலாமா என கேட்டேன், உடனே திருச்சி சூர்யாவும் என்னிடம் மன்னிப்பு கேட்டு அதை எடுத்துவிட்டார் என கூறியிருந்தார்.
இதையடுத்து வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட திருச்சி சூர்யா சிவா என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை என்றும் அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் தனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை செய்தியாளர்கள் சந்திப்பில் திருச்சி சூர்யா ஒலிபரப்பினார்.

வரிச்சியூர் செல்வம்
இதுகுறித்து வரிச்சியூர் செல்வம் அனுப்பிய வாட்ஸ் ஆப் ஆடியோவை திருச்சி சூர்யா சிவா வெளியிட்டார். அதில் வரிச்சியூர் செல்வம் பேசுகையில் தம்பி சூர்யா, முதல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் தம்பி, நீங்கள் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம் என்னுடன் இருந்த போட்டோவை நீங்கள் போட்ட போது கூட நான் உங்களுக்கு போன் செய்து தம்பி எனக்கும் காயத்ரி ரகுராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை, எனவே அந்த போட்டோவை எடுத்துடுங்க தம்பினு கேட்டேன். நீங்களும் நானும் ஒரே சமூகம் என்பதால் நான் சொன்னதும் நீங்களும் அந்த போட்டோவை ட்விட்டரிலிருந்து எடுத்துட்டீங்க. உங்களை நான் கட்டாயப்படுத்தி எடுக்க சொல்லலை.

கேட்குற ஆளா நீங்க
கட்டாயப்படுத்தினாலும் நீங்கள் கேட்கும் ஆள் இல்லை என்பது எனக்கு தெரியும். அன்பா சொன்னேன் நீங்களும் எடுத்துட்டீங்க. நான் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்த போது சூர்யா சிவா மன்னிப்பு கேட்டதாக வாய் தவறி நீங்கள் சொல்லாததை நான் சொல்லிவிட்டேன். டிவி பேட்டியில் நான் பார்த்த போதுதான் எனக்கு தெரிந்தது.

மன்னிச்சிடுங்க
என்னை மன்னிச்சிடுங்க தம்பி, நான் தெரியாம அந்த வார்த்தையை பேசிட்டேன். நீங்கள் எதுவும் வருத்தப்படாதீங்க. இப்பயும் சொல்றேன் தம்பி காயத்ரி ரகுராம் என்ற அந்த அம்மா எனக்கு யாருனே தெரியாது. ஆனால் நீங்கள் நம்ம சமூகத்துக்காரர், ஜாதிக்காரர். இது இல்லாமல் உங்கள் அப்பாவுடன் (திருச்சி சிவா எம்பி) கிட்டதட்ட 30, 40 ஆண்டுகளாக எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது.

மனசு கஷ்டமா இருக்கு
நீங்கள் மனசில் எதையும் வச்சிக்காதீங்க. நீங்கள் சொல்லாததை சொல்லிட்டேனே என நினைக்கும் போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு! இப்பதான் நான் கொடுத்த பேட்டியை முழுவதுமாக பார்த்தேன். சாரி தம்பி, மன்னிச்சிக்கோங்க தம்பி! எனக்கு மனசே கஷ்டமா இருக்கு. நான் மறுப்பு அறிக்கையை மதுரைக்கு போய்ட்டு உடனே ரெடி செய்கிறேன். அது போல் எல்லா பத்திரிகையாளர்களையும் வரவழைத்து நான் பேசிடுறேன் தம்பி, உண்மையை சொல்லிடுறேன் தம்பி! இவ்வாறு அந்த ஆடியோவில் வரிச்சியூர் செல்வம் பேசியிருந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications