எம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இரு வேட்பாளர்களும் எம்எல்ஏ, எம்பியாக இருந்த அனுபவம் பெற்றவர்கள்.
லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, இந்தசிய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை நேற்றைய தினம் அறிவித்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சுப்பராயன்
நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் குறித்த சுயவிவரங்களை பார்ப்போம். 77 வயதாகும் சுப்பராயனின் சொந்த ஊர் திருப்பூர். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

மாநில பதவிகள்
முழு நேர அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 1985-88, 1996-2001 வரை எம்எல்ஏவாகவும், 2004-09 வரை எம்பியாகவும் இருந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.

செல்வராஜ்
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அது போல் நாகைக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வராஜ் அத்தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 72 வயதாகும் இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி கிராமம்.

நாகை மாவட்ட செயலாளர்
1989- 91, 1996-1998, 1998- 1999 வரை 3 முறை எம்பியாக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் நாகை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications