Flashback: 2017இல் அவைத் தலைவர் பதவியை பறித்த சசிகலா.. பதிலுக்கு மதுசூதனன் செய்த சம்பவம்
சென்னை: 2017ஆம் ஆண்டு தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிமுக அவைத் தலைவர் பதவியை மதுசூதனனிடம் இருந்து பறித்தார் சசிகலா. பதிலுக்கு அவைத் தலைவர் என்ற முறையில் சசிகலாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் மதுசூதனன்.
மதுசூதனனின் உடல்நலம் குறித்து சசிகலா நேரில் விசாரித்த நிலையில் இந்த பிளாஷ்பேக் வைரலாகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். இதையடுத்து அப்போதைக்கு முதல்வராக ஓ பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர் சசிகலா
இந்த நிலையில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு முன்னர் முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறிய ஓபிஎஸ் திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார்.

இரண்டாக பிரிந்த அதிமுக
இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஓபிஎஸ்ஸுக்கு அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து சசிகலா கட்சிக்கு குந்தகம் விளைவித்ததால் அப்பதவியிலிருந்து மதுசூதனனை நீக்கினார். அந்த பதவிக்கு கே ஏ செங்கோட்டையனை நியமித்தார்.

சத்தியம்
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை சசிகலா மீறிவிட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டினர். பின்னர் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அது போல் டிடிவி தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இணைத்ததையும் நீக்கினார் மதுசூதனன்.
Recommended Video

சிறை சென்ற சசிகலா
இதையடுத்து சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னர் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். மேலும் அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார் சசிகலா. இந்த நிலையில் மதுசூதனன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை சசிகலா இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications