இந்தி படிப்பதை தடுக்கவில்லை! விஜய் சேதுபதி சொன்ன பிடிஆர் பேச்சு இதுதான்! என்ன சொல்லிருக்கார் பாருங்க
சென்னை: இந்தி படிப்பது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் பிடிஆர் பேசியதை மேற்கோள் காட்டியிருந்தார். அமைச்சர் பிடிஆர் என்ன பேசினார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தியில் சரளமாக பேசினார் விஜய் சேதுபதி.

அப்போது, செய்தியாளர் ஒருவர் இந்தி பற்றி கேள்வி எழுப்பினார். "75 வருடங்களாக நமது கலாச்சாரம், அரசியல் இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் 'இந்தி தெரியாது போடா' என்று பிரச்சாரம் செய்கிறோம். இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா" எனக் கேள்வி எழுப்பினார். உடனடியாக குறுக்கிட்ட விஜய் சேதுபதி, எதுக்கு இந்த கேள்வி, இந்தக் கேள்வியை என்னை மாதிரியான ஆட்களிடம் கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்தச் செய்தியாளர், தமிழ்நாட்டில், இந்தி படிக்க வேண்டாம் என திருப்பித் திருப்பிச் சொல்வார்கள் என்றார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதி, "இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை, திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். வித்தியாசம் இருக்கிறது. இங்கு யாருமே இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு இங்கு இந்தி படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை யாரும் தடுக்கவில்லை. இதற்கு நம்ம பிடிஆர் சார் ஒரு இடத்தில் நன்றாக தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை பாருங்கள்" எனப் பதில் அளித்தார். இதையடுத்து பிடிஆரின் பேச்சு வைரலாகி வருகிறது. பிடிஆர் அப்படி என்னதான் பேசியிருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- 80, 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரசியலுக்கு இந்தி கட்டாயம் என்ற கருத்தை யாராலும் சீண்ட முடியாது என்ற ஒரு பரந்த பிரச்சினை உள்ளது. அத்தியாவசியமற்ற மொழி என்று நாங்கள் கருதும் சில மொழியை நீங்கள் கட்டாயப்படுத்தினால், அது ஒரு சறுக்கலைப்போல விரைவில் ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இவ்விரண்டு மொழிகளையுமே இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் தர நிலைக்கு தள்ளிவிடும். எனவே தமிழ் அடையாளத்தின் அடிப்படையே எங்கள் மொழி.
பெரும்பாலான கலாச்சாரங்களில் மொழி அவர்களின் அடையாளத்தின் மையமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த உணர்வில் பேரறிஞர் அண்ணா சொன்னது போல எனக்கு இருமொழி கொள்கை இருந்தால், முதல் மொழியாக தமிழ் தான். ஏனென்றால் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் தாய்மொழியை தான் விரும்புகிறார்கள். அதன்பிறகு மாநிலம், நாடுகள் கடந்து ஆங்கிலம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது.
அது உண்மையில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு மொழி. நான் வணிக ரீதியாக உலகில் போட்டியிடும்போது மதிப்பு சேர்க்கக்கூடியது அது. நான் ஏன் இந்தியை கற்க வேண்டும். நான் சுட்டிக்காட்டியது போல், நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்தபோது நீங்கள் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தினீர், நீங்கள் திறம்பட சொல்வது என்னவென்றால், இந்தி பகுதியில் உள்ளவர்கள் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பிக்க முடியாது.
எனவே நீங்கள் உண்மையில் என்ன சொல்கிறீர்கள் என்றால் இந்தி மாநிலங்கள் ஒரு மொழிக் கொள்கையை கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு இந்தி மொழி மட்டும் தான் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான். நமக்கான மொழியான நமது தாய்மொழி. உலகம் முழுவதும் பேசுவதற்கு ஆங்கிலம், ஆங்கிலம் கற்க முடியாதவர்களிடம் பேசுவதற்கு இந்தி.
எனக்கு ஏன் மூன்று மொழி கொள்கை தேவை. அடிப்படையில் அவர்களுக்கு ஒன்று.. எங்களுக்கு மூன்று.. எனவே நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். தானாக முன் வந்து இந்தி பேச விரும்பும் எல்லாரையும் நான் வரவேற்று மகிழ்ச்சியடைகிறேன். சவப்பெட்டியில் கடைசி ஆணியையும் நான் போடுவேன் உங்களுக்கு நினைவிருந்தால்.
சுதந்திரத்தின் போது மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படியானால் நமக்கு ஏன் ராஜஸ்தான் மற்றும் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம். அவர்கள் அனைவரும் இந்தி பகுதிகள் என்று கருதினால் அவர்களின் அனைத்து மூல மொழிகளுக்கும் என்ன ஆனது? இந்தியை தொண்டைக்குள் தள்ளினால் அது தான் நடக்கும். இதனால் இந்தி மொழி எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications