இளையராஜாவுக்கு எதுவுமே செட் ஆகலயாம்.. தொடையில் தட்டி, நெஞ்சத்தை கிள்ளி! இதுதான் அந்த பாட்டா? சபாஷ்
சென்னை: நெஞ்சத்தை கிள்ளாதே என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஒரு பாடலுக்கு வித்தியாசமான ஒரு யுத்தியை கையாண்டுள்ளார்.
படம் ஃபிளாப்பானாலும் கூட இளையராஜா டியூன் போட்டாலே அந்த படம் ஹிட்டடிக்கும். பல படங்கள் இளையராஜாவின் பாடலுக்காகவே ரசிகர்கள் தியேட்டர் பக்கம் சென்றதும் உண்டு. அந்த அளவுக்கு தனது இசையால் தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு இளையராஜா அழைத்துச் சென்றார்.

80, 90 களில் வெளியான பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் இசையால் ஹிட்டடித்தது. தனது பாடல்களுக்கு நிறைய வித்தியாசங்களை காட்டியிருந்திருப்பார். இவர் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டவைகளில் தேர்ச்சி பெற்றவர்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் இளையராஜா. ஆர்மோனியம், கிட்டார் வாசிப்பதில் கைதேர்ந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இளையராஜாவுக்கு இசைஞானி என பட்டம் கொடுக்கப்பட்டது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்.
20 ஆயிரம் இசை கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு இசையின் மூலம் வேறுபடுத்தி காட்டியிருப்பார். ஒரே நாளில் எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். இவர் வீட்டு வாசல்கள் எத்தனையோ எத்தனை தயாரிப்பாளர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.
பிரசாத் ஸ்டூடியோவில் விடிய விடிய ரெக்கார்டிங் நடக்கும். அந்த காலத்தில் யூடியூப், டிவிடி இல்லாததால் ஒரு பாடலை கேட்க வேண்டும் என்றால் சினிமா தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆடியோ கேசட் வந்தால்தான் கேட்க முடியும். காதல் தோல்வி, நட்புக்குள் சண்டை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் அது இளையராஜாவின் இசைதான்.
பலரின் காதல் தோல்விகளுக்கு மருந்தாக இவருடைய இசை இருந்தது என சொல்லலாம். அப்படி ஒரு அற்புதமான இசையை கொடுத்த படம்தான் நெஞ்சத்தை கிள்ளாதே படம்! 1981 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடலுக்கு எஸ்பிபியும் ஜானகியும் பாடியிருந்தார்கள்.
அந்த பாடல்தான் பருவமே புதிய பாடல் பாடு என்ற மெலடி பாட்டு. இந்த பாடலில் நடிகர் மோகனும் சுஹாசினியும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் முகத்தை கூட தெளிவாக பார்க்க முடியாது. அதாவது இருவரும் ஜாக்கிங் செய்வார்கள். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்த பாடல் ஹிட்டடித்தற்கு இளையராஜா இசை என்பதையும் தாண்டி ஒன்று இருக்கிறது.
அதாவது இந்த பாடல் முழுவதும் வரும் ஜாக்கிங் ஷூ ஓசைதான். அது உண்மையிலேயே ஜாக்கிங் ஷூ ஓசை இல்லையாம். இதற்காக என்னவெல்லாமோ இளையராஜா செய்து பார்த்தும் அது போன்ற ஒரு ஓசை வரவில்லையாம். கடைசியாக தொடையில் தட்டி அந்த சப்தத்தை வரவழைத்தாராம். இப்படித்தான் அந்த பாடல் முழுக்க ஒருவர் தொடையில் தட்டிக் கொண்டே இருக்க இசை அமைத்தாராம். அதிகாலை 4 மணிக்கே இந்த பாடல் படமாக்கப்பட்டது. அடர்ந்த மூடுபனி, சூரிய ஒளியே இல்லாத போதிலும் அசோக்குமார் அந்த காட்சியை சூப்பராக படமாக்கியிருந்தார்.
இந்த படத்தில்தான் நடிகை சுஹாசினி அறிமுகம் ஆனார். அது போல் தமிழில் மோகனுக்கு கிடைத்த மிகப் பெரிய ரோல். இந்த படம் முழுவதும் பெங்களூரில் கப்பன் பூங்காவில் எடுக்கப்பட்டிருந்தது. இது ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடியது. இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. சிறந்த நடிகைக்கான விருது சுஹாசினிக்கு கிடைத்தது. இந்த படத்தில் சரத்பாபு, பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மோகனை முக்கிய வேடத்தில் தேர்வு செய்தது இதுதான் முதல் முறை.












Click it and Unblock the Notifications