2017- இல் சொன்னார்.. டிசம்பர் 2020-இல் சொன்னதை செய்கிறார்.. ரஜினியும் டிசம்பர் 31-ம்!
சென்னை: 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றார், தற்போது 2020 டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சியை அறிவிக்கிறார். இதை பார்க்கும் போது கண்ணா நான் சொல்றதைத்தான் செய்வேன், செய்யறதைதான் சொல்வேன் என்ற பஞ்சை ரசிகர்கள் நினைவுப்படுத்துகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தனது உடல்நிலை குறித்து கூறியிருந்தார்.
இதனால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என பலர் கருதினர். ஆனால் உண்மையான ரசிகர்கள் மட்டும் அவர் சொன்ன வாக்கை காப்பாற்றுவார், நிச்சயம் வருவார் என்றனர்.

ரஜினி
இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரஜினிகாந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

அதிசயம்
மேலும் அற்புதம், அதிசயம், நிகழும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு குறித்து டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் ரஜினியின் அறிவிப்பை கொண்டாடி வருகிறார்கள். மேலும் ரஜினி சொல்றதைதான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார் என்ற பன்ச்சை கூறி வருகிறார்கள்.

அம்பு
அதாவது ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டு ராகவேந்திர திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாகிவிட்டது. இன்னும் அம்பு விடுவது மட்டும்தான் பாக்கி என்றார்.

ரஜினிகாந்த்
இது ரசிகர்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதே போல் அன்று அரசியல் கட்சியை தொடங்குவேன் என கூறிய ரஜினிகாந்த் தற்போது டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இதனால் ரஜினியும் டிசம்பர் 31-ஆம் தேதியும் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications