பழைய ஓய்வூதியத் திட்டமே வேண்டும்.. TAPS-ஐ ரத்து செய்யக் கோரி வழக்கு! உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
மதுரை: மாநில அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TamilNadu Assured Pension Scheme - TAPS) அறிவித்து, இதற்கான அரசாணையும் வெளியிட்டு உள்ளது. அடுத்தடுத்து, இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தமிழகத்தில் 01.04.2003-க்கு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதுநாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

மத்திய அரசு 2013ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. தமிழகம் இதனை பின்பற்றவில்லை. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுனர் குழு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கடந்த 2014 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கலைமதி ஆகியோர் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் ஆஜராகி தமிழக அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TamilNadu Assured Pension Scheme - TAPS) திட்டம் அறிவித்துள்ளது அதற்கான அறிவிப்பாணை இரண்டு வாரங்களில் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு இதே நீதிபதிகளை அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆஜராகி வாதிடுகையில், பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் உலக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications