Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மதுரை ஆதீனம் பேசியதை கண்டுக்காம விட்டிருந்தா முடிஞ்சிருக்கும்.. பெருசாக்கிட்டீங்க”: சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது, மதுரை ஆதீனம் பேசியதை அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து, பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை. அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்படியே முடிந்து போயிருக்கும்" என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

High Court Criticizes Police for Politically Motivated Case Against Madurai Aadheenam

மதுரை ஆதீனம் சர்ச்சை

தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்தது என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் என்றும், முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார் மதுரை ஆதீனம். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொய் குற்றச்சாட்டு

இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது, அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது.

இடையடுத்து, மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆதீனம் மனு

இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதீனத்திடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடந்து வந்த மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டு, ஆதீனத்தின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.

பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை - ஐகோர்ட் நீதிபதி

அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி, "நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, மதுரை ஆதீனம் பேசியதை அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து, பெரிதுபடுத்தியுள்ளது காவல்துறை. அவர் பேசியதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்படியே முடிந்து போயிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு, விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+