அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு எதிரான வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு எதிராக வருமான வரித்துறை முழுமையான விசாரணை நடத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சராக கே.சி. வீரமணி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கே.சி. வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

High Court Dismisses Case Against Former AIADMK Minister KC Veeramani Imposes 1 Lakh Fine

2021 சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராகக் குற்றம் சாட்டி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கேசி வீரமணியின் வருமானம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருமான வரித் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன் பேரில், வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்துகளையும், அவரது வருமான வரிக் கணக்குகளையும் ஆய்வு செய்த வருமான வரித்துறை, 14 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், வேட்பு மனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு எதிராக தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வருமான வரித் துறை முழுமையான விசாரணை நடத்தவில்லை என்றும், முழு விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ராமமூர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது நீதிபதிகள், "வேட்பு மனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. முழுமையான விசாரணை நடத்துவது குறித்து வருமான வரித்துறை முடிவு செய்யும். இதில் மனுதாரருக்கு என்ன பாதிப்பு? தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+