சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவின் மனு ஹைகோர்டில் தள்ளுபடி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

High Court dismisses case filed by Anitha Radhakrishnan MLA over election winning

அந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதாகவும் அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதாகவும் எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனுதாரருக்கு ரூ. 50000 அபராதம் விதித்த ஹைகோர்ட்.. வழக்கும் தள்ளுபடி ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய மனுதாரருக்கு ரூ. 50000 அபராதம் விதித்த ஹைகோர்ட்.. வழக்கும் தள்ளுபடி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.. தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Madras High Court dismisses case filed by Anitha Radhakrishnan MLA over election winning; hc has also ordered that the case be investigated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X