17 வயசு பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது மோகமா.. நீதிபதிகள் அதிர்ச்சி
இளம்பெண்கள் திருமணமான ஆண்களை நம்பி போவது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை: கல்யாணம் ஆன ஆண்கள் மீது அப்படியென்ன ஆசை டீன் ஏன் பெண்களுக்கு? அவர்களை நம்பி வீட்டை விட்டும் ஓடிப்போகிறார்களே என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு என்னவென்றால், "45 வயது நபர் ஒருவரை எங்களது 17 வயது பெண் ஒருவர் காதலித்து அவருடனேயே ஓடிவிட்டதாகவும், எங்கள் பெண்ணை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கேட்டுக் கொண்டதுதான்!!

அதிர்ச்சியாக உள்ளது
இந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்குதான் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அமர்வு இதனை விசாரிக்க ஆரம்பித்தது. அப்போது நீதிபதிகள், "இப்படி 17 வயசு பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது காதல் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இப்படி திருமணம் ஆன ஆண்களை நிறைய டீன் ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள்.

ஒரே நாளில் 8 மனுக்கள்
இன்றுகூட திருமணமான ஆண்களுடன் சிறுமிகள் ஓடிவிட்டதாக ஒரே நாளில் 8 மனுக்கள் வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சிறுமிகள் வீட்டை விட்டு ஏன் வெளியேறுகிறார்கள் என்ற காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விஷயத்தை டிஜிபி மற்றும் சமூக நலத்துறை செயலாளர் போன்றோர் மிகவும் சீரியஸாக எடுத்துகொள்ள வேண்டும்.

பட்டியல் வேண்டும்
கடந்த 10 வருடங்களில் எத்தனை டீன் ஏஜ் சிறுமிகள் கல்யாணம் ஆன ஆண்களுடன் ஓடிப் போய் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்." இவ்வாறு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தமிழக அரசு பதில்
பின்னர், சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி தங்களுடன் அழைத்து செல்லும் ஆண்கள் மீது பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications