கோவில் நிதியில் முறைகேடு.. அறநிலையத்துறை அதிகாரி மீது உடனே ஆக்ஷன் எடுக்க உத்தரவிட்ட ஐகோர்ட்!
சென்னை: கோவில் நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை முதல் நிலை செயல் அலுவலருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்கும்படி, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் முதல் நிலை செயல் அலுவலராக பணியாற்றிய முத்துசாமி என்பவர், கோயில் நிதியில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்யதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் கடந்த 2020 ஆகஸ்ட்டில் விருப்ப ஓய்வு கேட்டு அறநிலையத்துறை ஆணையருக்கு அவர் கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை நிராகரித்த அறநிலையத்துறை ஆணையர், முத்துசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, விருப்ப ஓய்வை ஏற்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி முத்துசாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அவரது விருப்ப ஓய்வு மனுவை ஏற்கும்படி தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, முத்துசாமிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications