Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.4 கோடி வழக்கு.. விசாரணைக்கு தடை கோரி பாஜக கேசவவிநாயகம் வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ரயிலில் 4 கோடி ரூபாய் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

High court hears Kesava Vinayagam petition seeking a stay on Rs 4 crore seized case investigation

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரூ.4 கோடி பணம் சிக்கியது. இந்தப் பணம் பாஜகவின் திருநெல்வேலி மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு சொந்தமானது என புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை பாஜக பிரமுகர் கோவர்தன் உள்பட 15க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் போலீசார் சோதனையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பாஜக நிர்வாகி கோவர்தன் வீடு, ஹோட்டலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன் அனுப்பினர்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக பாஜகவில் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் ஆகியோர் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல்கள் வந்த நிலையில் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதேசமயம், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இன்னும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் கேசவ விநாயகம் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், எங்களது பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் வகையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 4 கோடி பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த வழக்கின் புலன் விசாரணை சட்ட விரோதமானது என்பதால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+