திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ள தடை விதிக்க கோரி வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கோளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆனந்தன், சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர், அந்த மனுவில், தங்கள் ஊரில் உள்ள 185 ஏக்கர் பரப்பளவில் பரவிய பெரிய ஏரியை நம்பி 730 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏரியில் 50 நாட்களுக்கு மட்டும் மண் அள்ள கடந்த ஏப்ரல் 21தேதி மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி அளித்த நிலையில், மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மீறி, ஒப்பந்ததாரர் பரத் என்பவர் ஐந்து அடிக்கு மேல் மண் அள்ளுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து விளைநிலம் பாதிக்கப்படுவதாலும் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மண் அள்ள அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வலா, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications