சிமெண்ட் விலை உயர்வுக்கு என்ன காரணம் ..? கூட்டுச்சதியா...? சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை: சிமெண்ட் விலை உயர்வு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணை முட்டும் சிமெண்ட் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், விலையேற்றத்துக்கான காரணத்தை ஆராய்ந்து ஜூன் 3-ல் அறிக்கை தர வேண்டும் என சி.பி.ஐ.க்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் விவரம் பின்வருமாறு;

கட்டுமானத் தொழில்
சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர். செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''கட்டுமான தொழிலுக்கு மிக முக்கியமான பொருளான சிமெண்ட் விலையேற்றம் சமீபகாலமாக உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ''

செயற்கை தட்டுப்பாடு
''கொரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தி வருகின்றனர். இதில், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் கூட்டுச்சதி உள்ளது. இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.''

மனுவில் முறையீடு
''இதனால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ஜூன் 3- ம் தேதி
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி. இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சீனிவாசனிடம் நோட்டீஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி ஜூன் 3- ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications