மற்ற வழக்குகளில் வந்தே பாரத் வேகம்.. முன்னாள் அமைச்சர்கள் என்றால் ஏன் இப்படி? ஐகோர்ட் கண்டனம்
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரணமானவர்கள் மீது பதிவு செய்யப்படும் ஊழல் வழக்குகளை 'வந்தே பாரத்' ரயில் வேகத்தில் வேகமாக விசாரித்து முடிக்கிறார்கள் என்றும், அதே லஞ்ச ஒழிப்பு போலீசார், முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறார்கள் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, சுமார் 98 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

விரைவாக விசாரிக்க உத்தரவு
இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
எனினும் இதனை காவல்துறை அமல்படுத்தவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்பு காவல் சூப்பிரண்டு விமலாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை மாநகராட்சி ஆணையர் காந்திமதி தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த கே.எஸ். கந்தசாமி ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் தமிழில் உள்ளதால், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அனுப்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று விளக்கமானது அளிக்கப்பட்டது.
ஏன் இவ்வளவு காலதாமதம்
காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காட்டமான கருத்துக்களை வைத்தார். அதாவது, முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த ஊழல் வழக்கை போலீசார் இழுத்தடிப்பது சரியானது போல இல்லை. சட்டமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருகிறது.
சாதாரணமானவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை எல்லாம் 'வந்தே பாரத்' ரயில் வேகத்தில் வேகமாக விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்யவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
தமிழில் அனுப்ப கூடாது என தெரியாதா?
இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கு மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம்? ஊழல் வழக்குகளை மட்டும் விசாரிப்பதில் சிறப்பு திறன் பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள் தமிழில் இருக்கக்கூடாது என தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பினர்.
போலீசாரின் செயல் அதிருப்தி அளிக்கிறது
12 ஆயிரத்து 250 பக்கங்களை அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால், மொழி பெயர்க்க ரூ.30 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவர்கள் 4 வாரத்துக்குள் பணியை முடித்து மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்ப 6 வாரங்கள் ஆகி விடும். அதன்பின்னர் மத்திய அரசு அனுமதி வழங்க எத்தனை வாரங்கள் எடுக்கும்?
இதையெல்லாம் பார்க்கும் போது ஐகோர்ட்டு உத்தரவை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக அமல்படுத்தவில்லை என்பது தெரிகிறது. இதுபோன்ற ஊழல் வழக்கை சாதாரண வழக்காக கருதமுடியாது. போலீசாரின் செயல் அதிருப்தி அளிக்கிறது. இந்த வழக்கை வருகிற நவம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications