மனுதாரரின் உண்மைத்தன்மையில் சந்தேகம் தெரிவித்த ஐகோர்ட்.. அமைச்சர் KN நேரு மீதான வழக்கில் ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த மனுதாரரின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுவதாக சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், டெண்டர் ஒதுக்குவதாக கூறி முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த ஆதி நாராயணன், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் வழக்கள் தொடர்ந்திருந்தனர். அமைச்சர் கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், கேஎன் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை மனு தாக்கல் செய்தார்.

ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாகக் கூறியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் குற்றம்சாட்டினார். அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் இன்பதுரை குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மனுதாரர் ஆதி நாராயணன் மீதான 32 வழக்குகளில் 18 வழக்குகள் முடிந்து விட்டன. இது தவிர 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளன" என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதன் பிறகு, வழக்குகள் தனக்கு எதிராக பதியப்பட்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். ஆனால் 2013 ஆம் ஆண்டு முதலே வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, "மனுதாரரின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுகிறது" என்றார்.
அதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, "ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். விரிவான விசாரணை நடத்த தேவையில்லை" என வாதிட்டார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பிலும், தாங்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயம். அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொகை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளும் உள்ளன" என்றார்.
அப்போது தலைமை நீதிபதி, "ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ஆரம்பகட்ட விசாரணை நடத்தவில்லை என்பதை காரணமாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்ய கோரலாம். அதன் அடிப்படையில் வழக்கும் ரத்து செய்யப்படலாம்" என சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "அமலாக்கத்துறை கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற கால வரம்பும் உள்ளது. அதேபோல, வங்கி மோசடி வழக்கில் தான் இந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மோசடி வழக்கும், அதனடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.
அதன் பிறகு தான் இந்த ஆதாரங்கள், தமிழக டிஜிபி-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என யாரும் கோர முடியாது" எனத் தெரிவித்தார்.
அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அதிகாரப்பூர்வமில்லாத ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளில், புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த வழக்கில் துவங்கியுள்ள விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் ஆவணங்களை கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. முழுமையான, முறையான விசாரணை நடத்தப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அப்போது, டிஜிபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, "இந்த விவகாரத்தில் தனி நபர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. முறையாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு எந்த அடிப்படையிலும் உரிமை இல்லை" எனத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உச்சநீதிமன்றம் வழங்கிய லலிதா குமாரி, மதன்லால் செளத்ரி வழக்குகளில், ஆதாரங்களுடன் புகார் அளித்தால் ஆரம்பகட்ட விசாரணை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது. குற்றச்சாட்டை ஒருவர் தெரிவிக்கும் போது, 2 மாதங்களாக ஏன் விசாரணை செய்யவில்லை? விசாரணையில் முகாந்திரம் இல்லை என்றால் வழக்கை முடித்து வைக்கலாம்.
அதற்காக விசாரணை செய்யாமலேயே இருப்பதா? புகார் அளித்தால் நேரடியாக விசாரணை நடத்தலாமே? ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications